Advertisment

கோட்டையில் திருமணம்; செல்போனுக்கு தடை விதித்த கத்ரீனா கைஃப் ஜோடி

Cellphone ban at katrina kaif vicky kaushal wedding

Advertisment

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிகர் விக்கி கௌசலும்காதலித்தது வந்த நிலையில் இருவருக்கும் வரும் 9 ஆம் தேதிராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்திற்காகநடிகை கத்ரீனா கைப் தனது காதலர் விக்கி கௌசலுடன் மும்பையில் இருந்து நேற்று (6.12.2021) ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள்சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (7.12.2021)தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க இருக்கும்இத்திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில்உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a93bed90-cd97-43c4-8e1d-ae34af692ed6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_65.jpg" />

Advertisment

இந்நிலையில்கத்ரீனா கைஃப் - விக்கி கௌசல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட திருமண அழைப்பிதழில்," உங்களை காண ஆவலுடன் உள்ளோம். திருமணத்தில் யாரும் செல்போனை பயன்படுத்தாதீர்கள், இங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்" எனக் கூறப்பட்டுள்ளது.

katrina kaif
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe