Skip to main content

கோட்டையில் திருமணம்; செல்போனுக்கு தடை விதித்த கத்ரீனா கைஃப் ஜோடி

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Cellphone ban at katrina kaif vicky kaushal wedding

 

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும்   நடிகர் விக்கி கௌசலும் காதலித்தது வந்த நிலையில் இருவருக்கும் வரும் 9 ஆம் தேதி ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைப் தனது காதலர் விக்கி கௌசலுடன் மும்பையில் இருந்து நேற்று (6.12.2021)  ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (7.12.2021)  தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை  மூன்று நாட்கள் நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் கத்ரீனா கைஃப் - விக்கி கௌசல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட திருமண அழைப்பிதழில்," உங்களை காண ஆவலுடன் உள்ளோம். திருமணத்தில் யாரும் செல்போனை பயன்படுத்தாதீர்கள், இங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்" எனக் கூறப்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரில்லர் படம் வெற்றிக்கனியை பறித்ததா? - 'மெரி கிறிஸ்துமஸ்' விமர்சனம்!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
merry christmas movie review

அந்தாதுன் படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்த முறை ஹிந்தி மட்டும் அல்லாமல் தமிழிலும் கால் பதித்திருக்கிறார். அதுவும் தமிழ் ரசிகர்களுக்காக விஜய் சேதுபதியும், ஹிந்தி ரசிகர்களுக்காக கத்திரினா கைஃபும் இணைத்து அவர்களோடு கூட்டணி சேர்ந்து மீண்டும் ஒரு திரில்லர் படம் மூலம் பொங்கல் ரேசில் களம் கண்டுள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றிக்கனியை பறித்தாரா இல்லையா?

ஒரு கொலை குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் மும்பைக்கு திரும்புகிறார் விஜய் சேதுபதி. வந்த இடத்தில் அவருக்கென்று யாரும் இல்லை. இருந்த அவரது தாயும் ஏற்கனவே இறந்து விடுகிறார். இதனால் மனம் நொந்து போன அவர் சற்று இளைப்பாற ஒரு ரெஸ்ட்டோபாருக்கு செல்கிறார். போன இடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான கத்ரீனா கைஃப் தன் மகளோடு அதே ரெஸ்ட்ரோபாரில் இருக்கிறார். அங்கு விஜய் சேதுபதிக்கும், கத்ரீனா கைப்புக்கும் எடுத்த எடுப்பிலேயே பார்த்த மாத்திரத்தில் நட்பு ஏற்படுகிறது. இருவரும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு மது அருந்த செல்கின்றனர். போன இடத்தில் கத்ரீனா கைஃப் கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடைக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி, போலீசுக்கு பயந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இருந்தும் விதி அவரை மீண்டும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு கொண்டு செல்கின்றது. இதையடுத்து அந்த கொலையை செய்தது யார்? இந்தக் கொலையை துப்புத் துலக்க வரும் போலீஸிடம் இருந்து விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் தப்பித்தார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

எப்பொழுதும் போல் தன் வழக்கமான திரைக்கதை பாணியை இந்தப் படத்திலும் சரியான திருப்பங்களுடன் கொடுத்து மீண்டும் வரவேற்பைப் பெறும் வகையிலான ஒரு ஃபீல் குட் திரில்லர் படம் கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். படம் ஆரம்பித்து ஸ்டேஜிங்கிற்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும் போகப் போக அழுத்தமான திருப்பங்கள் நிறைந்த காட்சி அமைப்புகள் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறச் செய்து அதற்கு ஏற்றவாறு பல்வேறு டிவிஸ்டுகள் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்தாலும் போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி நல்ல கிரிப்பிங்காக அமைந்து இறுதியில் எதிர்பாராத வகையில் டிவிஸ்டுகள் நிறைந்த கிளைமாக்ஸோடு முடிந்து பொங்கல் ரேசில் வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

பொதுவாக எப்போதும் நடிப்பால் கைத்தட்டல் பெறும் வகையில் நடிக்கும் விஜய் சேதுபதி, திரில்லர் படங்கள் என்றாலே இன்னும் ஒரு படி மேலே போய் ஜஸ்ட் லைக் தட் நடித்து ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் இந்த திரில்லர் படத்திற்கும் அதை அவர் செய்யத் தவறவில்லை. படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. இருந்தும் கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்புகளில் எல்லாம் அழகான வசன உச்சரிப்புகள், முகபாவனைகள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கு சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை தன் அனுபவ நடிப்பால் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார் நாயகி கத்ரீனா கைப். நாய்களுடன் காட்டும் கெமிஸ்ட்ரி ஆகட்டும், தன் பெண் குழந்தை மேல் பாசம் காட்டும் தாயாகவும் ஒரு சேர சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் உடல் மொழி ஆகியவையும் கவரும்படி இருக்கச் செய்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இருவருமே ஆக்கிரமித்திருப்பதால் மற்றவர்களுக்கு அதிக வேலை இல்லை. இருந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் ராதிகா சரத்குமார், சண்முகராஜன், மூத்த நடிகர் ராஜேஷ், கவின்ஜே பாபு, வாய் பேச முடியாத சிறுமி உட்பட பலர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் புகுந்து விளையாடுகின்றனர். குறிப்பாக போலீசார் துப்பறியும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ராதிகா அண்ட் கோ. 

மது நீலகண்டன் ஒளிப்பதிவில் கத்ரீனா கைஃப் சம்பந்தப்பட்ட வீடு, அதனுள் நடக்கும் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேர காட்சிகளில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் திரில்லருக்கான எலிமெண்ட்ஸ்களையும் சரியான கலவையில் கொடுத்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இவருடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டேனியல் பி ஜார்ஜ். இவரது பின்னணி இசை படத்திற்கு மிக சிறப்பாக உயிரூட்டி உள்ளது.

ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தை வைத்துக்கொண்டு திரில்லர் பாணியில் சிறப்பான அதிரடி திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையுடன் கொடுத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.

மெரி கிறிஸ்துமஸ் - நிறைவான திரில்லர்!

Next Story

“ஒரு சிந்தனையுள்ள நடிகை” - மெரி கிறிஸ்துமஸ் பட அனுபவம் பகிர்ந்த விஜய் சேதுபதி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
vijay sethupathi about katrina kaif

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடு பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “நான் வில்லன் கதாபாத்திரங்களை ரசிக்கிறேன்.

திரையில் நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் மற்றும் விளையாடலாம். வெளிப்படுத்துதல் என்பது உணவு மற்றும் சுவை போன்றது, நான் எல்லா சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன். கத்ரீனா கைஃப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. திரைத்துறையில் அவர் இன்றும் இருப்பது, அவர் அழகாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவருடைய புரிதல் தான். அவர் ஒரு சிந்தனையுள்ள நடிகை” என்றார்.