/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/76_33.jpg)
16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் மோதுகின்றன. தற்போது வரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அதே 11 புள்ளிகளுடன் சென்னை அணி மூன்றாவது இடத்திலும், உள்ளன.
இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றனர். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 139 ரன்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியை பார்க்க திரை பிரபலங்கள் பலரும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், வரலக்ஷ்மி சரத்குமார், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசிக்கின்றனர். மேலும் தோனியின் மனைவி சாக்ஷி, அவரது குழந்தை ஸிவா ஆகியோரும் குடும்பத்துடன் வந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)