Celebrity confirmed to star in 'thalaivar169'

Advertisment

ரஜினிகாந்த், கடைசியாகசன்பிக்சர்ஸ்தயாரிப்பில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் எதிர் பார்த்தவெற்றியைப்பெறவில்லை. இதனை அடுத்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்குஅனிருத்இசையமைக்கிறார். படத்தின்ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன்,ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளிவந்தது. மேலும் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஇருப்பதாகத்தகவல் வெளியானது.

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. சிவ ராஜ்குமார் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனைஉறுதிபடுத்தியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "ரஜிகாந்த்துடன்இணைந்து நடிப்பதை அனைவருமே சிறந்தவாய்ப்பாகக்கருதுவார்கள், எனக்கு அந்த வாய்ப்பு இந்த படத்தில் சாத்தியமாகியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ரஜினிஎன்னைச்சிறுவயதிலிருந்தே அறிவார். மூத்த நடிகருடன் நான் ஒரு சிறப்பானநட்பைப்பகிர்ந்து கொண்டு வருகிறேன். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. ரஜினி சாரையும் என்னையும் சேர்த்து வெள்ளித்திரையில் பார்ப்பதை ரசிகர்கள் நிச்சியம் விரும்புவார்கள்.

'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல்நடக்கவுள்ளதாககூறப்படுகிறது. மேலும் சிவ ராஜ்குமார் அந்த பேட்டியில், " ரஜினிசாருடன்நான் நடிக்கும் காட்சி செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு பெங்களூரு அல்லது மைசூரில் படமாக்கப்படும்" எனவும் கூறியுள்ளார்.