Advertisment

"இந்தாண்டு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறையட்டும்" - பிரபலங்கள் வாழ்த்தில் விஜய்

celebrities wishes vijay birthday

Advertisment

இந்திய அளவில் பிரபல ஹீரோவாக இருக்கும் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் இலவச உணவு, ரத்ததானம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், "அண்ணன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மோகன்லால், "ஹேப்பி பர்த்டே டியர் விஜய்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், "சகோதரர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். லியோ படத்தின் வெளியீட்டிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தாண்டு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sanjay Dutt mohanlal actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe