celebrities wishes for sivakarthikeyan birthday

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கும் இவர் இன்று(17.02.2025) பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் அவரை வைத்து ‘பராசக்தி’ என்ற தலைப்பில் தற்போது படமெடுத்து கொண்டிருக்கும் சுதா கொங்கரா படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு படமான ‘மதராஸி’ படத்தின் படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் இன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனிடையே சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து அமரன் பட தயாரிப்பாளர் மற்றும் உட்ச நட்சத்திரமான கமல்ஹாசன், “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வாழ்த்தியுள்ளார். மேலும் வெங்கட் பிரபு, கோட் படத்தின் விஜய்யுடன் சிவகர்த்திகேயன் நடித்து காட்சியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், “தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்” எனக் குறிப்பிட்டு எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment