/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/292_15.jpg)
தெலுங்கு மட்டுமல்லாது இந்திய அளவில் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது படங்கள் முதல் நாளில் நல்ல வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது. ' பாகுபலி : தி பிகினிங்' திரைப்படம் முதல் நாளில் 75 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வெளியான 'பாகுபலி : தி கன்குளுஷன்' எனும் திரைப்படம் தொடக்க நாளில் 200 கோடி ரூபாயை வசூலித்தது.
இதயடுத்து வெளியான 'சாஹோ' திரைப்படம் தொடக்க நாளில் 130 கோடி ரூபாயையும், 'சலார் 'திரைப்படம் தொடக்க நாளில் 178 கோடி ரூபாயும், 'கல்கி 2898 கிபி' திரைப்படம் தொடக்க நாளில் 180 கோடி ரூபாயும் வசூலித்து சாதனை படைத்தது. இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் இவரும் ஒருவர். 'பாகுபலி 2' அந்த சாதனையை நிகழ்த்திய முதல் படம்.
மேலும் வெளிநாடுகளில் இப்படம் 396.5 கோடி ரூபாயையும், 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் உலக நாடுகளில் 275.4 கோடி ரூபாயையும் வசூலித்தது. 'சலார் பார்ட் 1' திரைப்படம் 137.8 கோடிகளையும் 'சாஹோ' திரைப்படம் 78.5 கோடி ரூபாயும் வசூலில் குவித்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு(23.10.2024) ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)