svxvx

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள 'டான்' படத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

Advertisment

alt="jgjgj" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b913393d-989c-40c9-a17e-8d74355bfb22" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_26.jpg" />

சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை, லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில், பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 30 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

Advertisment

alt="jfjgbj" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d5ad7f8f-d6bd-428b-9eaf-a0fc755e4fdb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip-Article-inside-ad-500x300_0.jpg" />

மேலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'டான்' படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக திரைத்துறையில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நாயகியாக 'டாக்டர்' படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். நகைச்சுவை வேடத்தில் சூரியும், முக்கியக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர்.