தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா சென்ற ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் மணப்பெண் தேடல் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் அவர் யாரையும் மணமகளாக அவர் தேர்வு செய்யததை தொடர்ந்து பெற்றோர் அவருக்கு மீண்டும் மணப்பெண் தேடி வந்தனர். இந்நிலையில் ஆர்யாவுக்கும் பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி சாயிஷாவுக்கும் கஜினிகாந்த் பட சமயத்தில் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வனமகன், ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து காதலர் தினத்தில் ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அன்பும் ஆசியும் தேவை” என்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக பதிவிட்டு இவர்களை காதலை உறுதிப்படுத்தினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதைத்தொடர்ந்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. மெகந்தி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஆதித்ய பஞ்சோளி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா-சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது. இதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தமிழ் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், ராணா, ஷாம் ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன்,இயக்குனர் ஏ.எல்.விஜய்உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் சில தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கலும் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். மேலும் வரும் 14ஆம் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலவேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர்.