Advertisment

தெலங்கானா தேர்தல்; கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்

Celebrities voted in Telangana Elections 2024

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின்தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதையடுத்து தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (30.11.2023) நடைபெற்று வருகிறது. அங்கு பி.ஆர்.எஸ். கட்சி ஆளும் கட்சியாக இருந்த நிலையில், அக்கட்சிக்கும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது. 119 தொகுதிகள் மொத்தம் இருக்கும் நிலையில், அத்தனை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

இந்த 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சுமார் 50 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 375 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதிஎண்ணப்படவுள்ளது.

Advertisment

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்களான சிரஞ்சீவி, ராஜமௌலி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், கீரவாணி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

Voting Assembly election telengana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe