ADVERTISEMENT

"நான் இந்துஸ்தான்... அதற்காக வெட்கப்படுகிறேன்..."ஆசிஃபாவிற்காக இணைந்த இந்திய பிரபலங்கள்! 

04:12 PM Apr 16, 2018 | santhosh


சமீபத்தில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நீதி கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆசிஃபா என்ற சிறுமி காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு பிரபல நடிகர், நடிகைகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் நடிகை தமன்னா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... "ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது.நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடைவு கொண்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் இது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோவில் பேசியபோது...."நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்லுவேன். எனக்கு அப்போது என்ன நடந்தது கூட எனக்கு தெரியாது. பாலியல் தொல்லைகள் கொடுப்பது எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள். நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்" என்றார்.

இதற்கிடையே இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடுமையை எதிர்த்து நீதி வேண்டி கையில்
"Iam Hindustan
Iam ashamed
#justice for our child. 8 years old. Gangraped.
Murdered in ‘devi’ thaan temple.
#kathua"

என்று எழுதிய பதாகையை கையில் ஏந்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT