Advertisment

பெண்களுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்திய எதிர்நீச்சல் பாடகர்...

யோ யோ ஹனிசிங், பிரபல பஞ்சாபி பாடகர். பல ஹிந்தி படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார் இவர். எதிர்நீச்சல் படத்திலும் பாடல் ஒன்றை பாடியுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மக்னா என்றொரு பாடலை யூ-ட்யூபில் வெளியிட்டார். தற்போதுவரை 200 மில்லியன் பார்வையாளர்கள் கண்டிருக்கும் அந்த பாடலின் வரிகளில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

honey singh

இந்நிலையில் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாடி, “ஹனிசிங்கின் சர்ச்சைக்குரிய பாடல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பாடல் காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. மாநில அரசு அந்தப் பாடலுக்கு தடை விதிக்க வேண்டும். ஹனிசிங் தொடர்ந்து அவரது பாடல்களில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்த புகார் தொடர்பாக பஞ்சாப் போலீஸ் ஹனி சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

honey singh anirudh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe