Advertisment

உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த காவலர்; அதிரடியாக பாய்ந்த வழக்கு 

case filed against police man kathiravan udhayanidhi stalin nenjukku needhi banner

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தைத் தமிழில்அருண்ராஜா காமராஜ் இயக்க,உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று(20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களும், திமுகவினரும் போஸ்டர் மற்றும் பேனர்களைவைத்தனர். இதேபோன்று பெரம்பலூர் பழக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் உதயநிதி ஸ்டாலினின்நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்திருந்தார். இதனைப்பார்த்த பலரும்காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இந்த மாதிரியான செயல்களில்ஈடுபடலாமாஎன்று விமர்சங்களை வைத்தனர். இதனிடையே பெரம்பலூர் காவல்துறை கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் பேனர் வைத்ததால்அவர் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவு 4 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisment

arunrajakamaraj Perambalur nenjukku needhi Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe