case against filed lubber pandhu movie actress swasika

மலையாள நடிகை ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து எம்.எல்.ஏ. மற்றும் நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு உள்ளிட்ட 6 நபர்கள் மீது பாலியல் புகார் முன்வைத்தார். இதில் முகேஷ், இடைவேளை பாபு ஆகியோர் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரியால் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே இருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்த மலையாள நடிகை யூடியூப் சேனலில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் கூறி வருவதாக நடிகைகள் சுவாசிகா, பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீது நெடும்பாசேரி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பீனா ஆண்டணி மற்றும் மனோஜ் ஆகியோர் கணவர் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சுவாசிகா 2009ல் வெளியான வைகை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படத்தில் நடித்திருந்தார்.