Advertisment

நடிகை டிம்பிள் ஹயாதி மீது வழக்குப்பதிவு

Case against actress Dimple Hayathi

Advertisment

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகைடிம்பிள் ஹயாதி தமிழில் பிரபுதேவா நடித்த 'தேவி 2' படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்த இவர் தனுஷ்இந்தியில் நடித்த 'அந்த்ராங்கி ரே' படத்திலும்நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தடிம்பிள் ஹயாதி, ஹைதராபாத்தில் உள்ளஜூப்ளி ஹில்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில்டிசிபிராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்நடிகைடிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் இருவரும் வேண்டுமென்றே தனது வாகனத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளதாகடிசிபிராகுல் ஹெக்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ளசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் வண்டியை மோதியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட டிம்பிள் ஹயாதி, "அதிகார துஷ்பிரயோகம் தவறுகளை மறைக்காது" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Actress dimple hayathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe