ADVERTISEMENT

விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு 'கார்' பரிசளித்த தயாரிப்பாளர்...

03:59 PM Nov 04, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம், 'க/பெ ரணசிங்கம்'. விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை பெ.விருமாண்டி இயக்கியிருந்தார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் கொட்டப்பாடி ராஜேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, பே-பெர்-வியூ முறையில், ஓ.டி.டி தளத்தில் வெளியானது. சமூக பிரச்சனையைப் பேசிய 'க/பெ ரணசிங்கம்' படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், அனைவராலும் பாராட்டப்பட்டது.

'க/பெ ரணசிங்கம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் பெ.விருமாண்டிக்கு, கார் ஒன்றைப் பரிசளித்து சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார், படத்தின் தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT