captain miller video views 5 million

செல்வராகவன்இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர்வெங்கிஅட்லூரிஇயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தாமேனன்நடிக்கிறார். இதனிடையே அருண்மாதேஸ்வரன்இயக்கும் கேப்டன் மில்லர்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதிஃபிலிம்ஸ்'சார்பாகதியாகராஜன் தயாரிக்கிறார்.ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளஇப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படம் குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பைபடக்குழு வீடியோ வடிவில் வெளியிட்டிருந்தது. ரசிகர்களை கவரும் படி வெளியான இந்த அறிவிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 5.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் கோலிவுட் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.

Advertisment