Advertisment

‘புரட்சி ஓங்குக’ - கேப்டன் மில்லர் முதல் பாடல் அப்டேட்! 

Captain Miller Song update by dhanush

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘படத்தின் இசை தொடங்குவதற்கு அமைதியாகக் காத்திருங்கள்’ எனும் கேப்ஷனுடன் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.

தனுஷின்இன்ஸ்டா பதிவில், கையில் உடுக்கையை ஏந்தியபடி தனுஷ் நிற்க அவருக்குப் பின்னால் உள்ள சுவரில், கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் புகைப்படமும் கம்யூனிஸ்ட் சின்னமும் வரையப்பட்டுள்ளது. அந்த சுவரில் ‘புரட்சி ஓங்குக’ எனும் வாசகமும் அடங்கியிருக்கிறது. இது தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத்தூண்டியுள்ளது.

actor dhanush Captain Miller
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe