தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ‘கில்லர் கில்லர்...’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. தனுஷ் பாடியிருந்த இப்பாடல், வில்லன்களுக்கு தனுஷ் எச்சரிக்கை செய்யும் வகையில் இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘உன் ஒளியே...’ என்ற பாடல் நாளை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழோடு சேர்த்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடுஒரு சிறிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை பார்க்கையில் படத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவருக்குமான காதல் பாடலாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது.