Advertisment

தள்ளி போகும் கேப்டன் மில்லர்; அறிவிக்கப்பட்ட புதிய ரிலீஸ் தேதி

captain miller release postponed new release date

Advertisment

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், அதன் ரிலீசுக்குக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரியங்கா மோகன் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.

இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் இப்படம் தள்ளிப்போய் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் வணங்கான் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisment

actor dhanush Captain Miller director arun matheswaran
இதையும் படியுங்கள்
Subscribe