captain miller fans celebrations

Advertisment

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது.

தனுஷ் ரசிகர்கள் காலை முதலே சென்னை மற்றும் புதுச்சேரியில் பல திரையரங்குகளில் பேனர் வைத்து, அதற்கு பால் அபிஷேகம் செய்து, பின்பு வெடி வெடித்து கொண்டாடினர். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்துதனுஷின் இரு மகன்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு, முழு கரும்பு வழங்கி கொண்டாடினர் தனுஷ் ரசிகர்கள்.

இதே போல் புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ததுடன், 108 தேங்காய் உடைத்து கொண்டாடினர். மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கு கரும்பு வழங்கினர். இது அப்பகுதியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.