captain marvel

Advertisment

கேப்டன் மார்வல் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி, உலக மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 78 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கும். இந்த படம் சுமார் 25 மொழிகளில் வெளியாகியுள்ளது. சீனாவில் மட்டும் 34 மில்லியன்கள் நேற்று ஒரு நாளிலேயே சம்பாதித்திருக்கிறதாம். இந்தியாவில் 15 கோடி வரை சம்பாதித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. மார்வல் நிறுவனத்தில் வெளியான படத்தில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்திற்கு அடுத்து முதல் நாளே மிகப்பரிய ஓப்பனிங்கில் ரிலீஸான படம் இதுதான்.