ADVERTISEMENT

மான்ஸ்டருடன் மோதும் 'கேப்டன்' ஆர்யா

07:29 PM Apr 04, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'எனிமி' படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் படம் 'கேப்டன்'. இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'டெடி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் 'கேப்டன்' படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'கேப்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்போஸ்டரில் ஆர்யா கையில் துப்பாக்கியுடன் மாஸாக தோன்றியுள்ளார். ஆர்யாவின் பின்புறம் மான்ஸ்டர் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் புது ஜானர் மற்றும் புது முயற்சிகளை எடுத்து வருபவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். 'டிக் டிக் டிக்', 'மிருதன்', 'டெடி' என பல புதுமையான படைப்புக்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது 'கேப்டன்' படம் மான்ஸ்டரை மையமாக வைத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT