Advertisment

தாயை கொன்றதாக பிரபல நடிகை கைது! அதிர்ச்சியில் சினிமாத்துறையினர்...

பெற்ற தாயைக் கொலை செய்ததாக கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

mollie

அமெரிக்காவிலுள்ள கன்ஸாஸ் நகரத்தைச் சேர்ந்தவர் நடிகை மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு. இவருக்கு வயது 38. இவர் நடிப்பது மட்டுமின்றி சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து நடித்தும் வந்தார். கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதே படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இவருடைய தாயாருக்கு வயது 68. தனது தாயை ஃபிட்ஸ்ஜெரால்து கொலை செய்துள்ளார் என்று கன்சாஸ் நகர போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.

மோலியின் தாய் பேட்ரீஸியா ஃபிட்ஸ்ஜெரால்ட் தனது சகோதரருடன் பல ஆண்டுகளாக ஹூஸ்டனில் வசித்து வந்துள்ளார். அவர் கன்ஸாஸ் நகரில் குடியேற முடிவு செய்திருந்த நிலையில், சொந்த மகளாலேயே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் மோலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகையாகவும் பிரபல தயாரிப்பாளராகவும் உள்ள மோலி தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது ஹாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hollywood marvel studios
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe