publive-image

இயக்குநர்முத்தையா இயக்கும் 'விருமன்' படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். படத்தினுடைய போஸ்ட் புரொடெக்சன்வேலைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்-1' படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

Advertisment

இந்நிலையில்கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், "எனக்கு குதிரைகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. காஷ்மோரா படத்திற்காக குதிரை சவாரி கற்றுக்கொண்டேன். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் முழுவதும் குதிரையின் மேல்தான் பயணித்தேன். அந்த மகிழ்ச்சியான தருணங்களை விவரிக்க வார்தைகளே இல்லை" எனக் குதிரையோடு இருந்த நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

Advertisment