cannes

உலகம் முழுவதும் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா வைரஸ் பரவால் பாதிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டன. இதனால் வருடா வருடம் மிகவும் கோலாகலமாக ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'கான்ஸ்' திரைப்பட விழா, கரோனாவால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

Advertisment

அதனைத் தொடர்ந்து கரோனாவின் பாதிப்பு அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் கான்ஸ் திரைப்பட விழாவை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த முடிவை மாற்றியுள்ளனர் கான்ஸ் குழுவினர். இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் நடைபெறவுள்ள திரைப்பட விழாக்களிலேயே கான்ஸ் விழாவுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களைத் திரையிடவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் பணி வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கும் படங்களை ஒட்டுமொத்தமாகத் திரையிடாமல் தனித்தனியாக மற்ற திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படங்கள் உலகம் முழுக்க நடைபெறும் திரை விழாக்களில் ‘கேன்ஸ் 2020’ என்ற குறியீட்டுடன் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.