Advertisment

கேன்ஸ் திரைப்பட விழா: பிரம்மாண்டமாக போஸ்டரை வெளியிட ‘அண்ணாச்சி’ படக்குழு திட்டம்

Cannes Film Festival: 'The Legend' crew plans to release a poster

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'மோசலோ மொசலு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் போஸ்டரை உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை இப்படத்தின் கதாநாயகி ஊர்வசி ராவ்டேலா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊர்வசி ராவ்டேலா , "தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தி லெஜண்ட்’ படத்தின் போஸ்டர் வெளியீட்டிற்கு என்னை அழைத்திருப்பதற்காக பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment

'கேன்ஸ் திரைப்பட விழா 2022' இன்று தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைபிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட பலரும் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.அதோடு கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பான வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

arul saravanan cannes film festival the legend
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe