Skip to main content

'கேன்ஸ் திரைப்பட விழா'; ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த கமல் ; வைரலாகும் வீடியோ

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

'Cannes Film Festival'; Kamal made his entry in helicopter

 

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான  நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில்  திரைபிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட ஒரு குழு இந்தியா சார்பில் கலந்துகொள்கிறது.  

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் பலரும் கலந்து கொள்ளும் நிலையில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் செல்லும் வீடியோ வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. மேலும் இந்த படத்தின் 'என்எப்டி'-க்கள் வெளியாகிறது. இதற்காக ஃபேன்டிகோ என்னும் நிறுவனம் தங்களுடைய தனிப்பட்ட மெட்டாவெர்ஸ் எனப்படும் விர்ச்சுவல் உலகமான 'விஸ்டாவெர்ஸ்'-ல் 'விக்ரம்' பட போஸ்டர்கள், கதாபாத்திரங்களின் வடிவங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்காக அவர்களுடன் கைகோர்த்துள்ளது. 


  
இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. அதோடு  இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பான வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் போஸ்டரும் இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்