Advertisment

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா!

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும்.

Advertisment

hitha

14 வயதே ஆகும் ஹிதா, இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தினார். மகேந்திரா சிட்டி பின்னால் இருக்கும் மகரிஷி பள்ளி மைதானத்தில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியை காண கூடி இருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு கரகோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

தமிழகத்திற்கு மிகவும் புதுமையான நபரான ஹிதா பாடியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அங்கிருந்த ரசிகர்கள், சுமார் 10 நிமிடம் கைதட்டி தங்களின் வரவேற்பை தெரிவித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe