சென்னை கொளத்தூரைச்சேர்ந்த இளம்பெண்(22) ஒருவர் தொலைக்காட்சிதொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும்வளசரவாக்கத்தை சேர்ந்தகாசிநாதனுக்கும்(44) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காசிநாதன் துணை நடிகைக்கு தொடர்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அது குறித்து பேச வேண்டும் என்று கூறி துணை நடிகையை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரின் ஆசை வார்த்தையைநம்பிய துணை நடிகை காசிநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில்இருந்த காசிநாதன் துணை நடிகையிடம்அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து அந்த துணை நடிகை தனது ஆண் நண்பரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஆண் நண்பர் துணை நடிகையை மீட்டுள்ளார்.அதன்பிறகு பாதிக்கப்பட்ட துணை நடிகை ஒளிப்பதிவாளர் காசிநாதன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒளிப்பதிவாளர் காசிநாதனைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.