Advertisment

'சூப்பர் ஸ்டாரிடம் இருந்து வந்த அழைப்பு...' - விக்ரம் பிரபு நெகிழ்ச்சி

'Call from Superstar ...' - Vikram Prabhu surprised

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வாரம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. இப்படத்தில் அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மக்களிடம் பலத்த வரவேற்பு பெற்று வரும் இப்படம் காவல்துறையின் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்கள், மிரட்டல்கள், அரசியல் போன்றவற்றை நேரடியாகத் தோலுரித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விக்ரம் பிரபுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், " என் நடிப்பை பாராட்டி சூப்பர் ஸ்டாரிடம் இருந்து வந்த அழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் கனவு காணத் துணியாத ஒன்றை சாதித்ததாக உணர்கிறேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றினால் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்கும்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Taanakkaran vikram prabhu Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe