Junior NTR to join with Vetrimaaran

Advertisment

வெற்றிமாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதனிடையே 'ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட்' சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதனை அடுத்து சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். 'வி கிரியேஷன்ஸ்' சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகை, பூஜையுடன் நடந்தது.

இந்நிலையில் வெற்றிமாறன், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர்-யிடம் வெற்றிமாறன் கதை கூறியுள்ளதாகவும், அந்த கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர் ஓகே சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வெற்றிமாறன் 'விடுதலை' மற்றும் 'வாடிவாசல்' படங்களை முடித்த பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.