Advertisment

“தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு அன்னதானம்” - புஸ்ஸி ஆனந்த்

bussy anand press meet

Advertisment

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு எனக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 26ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உலக பட்டினி தினமான (28.05.2024) அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி உலக பட்டினி தினமான இன்று தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்ஏழை எளிய மக்களுக்கு த.வெ.க. சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இதே போல் 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப காலை மற்றும் மதிய உணவு அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தளபதி விலையில்லா விருந்தகம் பல வருடங்களாக 23 இடங்களில் தினசரி காலை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பட்டினி தினத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா எனப் பல்வெறு மாநிலங்களில் த.வெ.க நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில்தமிழகத்தில்மட்டும் 3.50 லட்சம் பேருக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

வரும் காலங்களில் த.வெ.க. நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சி நடக்கும் மண்டபங்களில், அருகில் உள்ள முதியோர், ஆதரவற்ற இல்லங்களில் இருப்பவர்களை அழைத்து உணவு வழங்கப்படும். ஜூன் 22 தலைவருடைய பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யவுள்ளோம்” என்றார்.

Bussy Anand tvk Tamilaga Vettri Kazhagam actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe