bumrah meet rajini

உலகில் பிரபல பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியாவில் முக்கியமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த 13ஆம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Advertisment

இந்தியாவை பொறுத்தவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே, அட்லீ உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பிரபல மல்யுத்த குத்து சண்டை வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்கள் பிரபலங்கள் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றன. அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் விக்னேஷ் சிவன் அத்திருமணத்தில் தோனியுடன் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Advertisment

bumrah meet rajini

இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிட் பும்ரா ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பும்ரா மற்றும் அவரது மனைவியும் ரஜினி மற்றும் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். மேலும் அந்தப் பதிவில், “நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.