bromance movie accident arjun ashokan sangeeth prathap injured

மலையாளத்தில் அருண் ஜோஷ் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், பிரேமலு மூலம் பிரபலமான சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ப்ரொமேன்ஸ்’. இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அப்படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் கொச்சியின் எம்.ஜி.சாலையில் கார் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு பைக்கை அந்த கார் வேகமாக முந்திச்செல்வது போல் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அந்த கார் வேறொரு உணவு டெலிவரி செய்யும் நபரின் பைக் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில், நடிகர்கள் அர்ஜுன் அசோகனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கீத் பிரதாப்புக்கு கழுத்தில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அதோடு உணவு டெலிவரி நபருக்கும் காலில் பலத்த காயமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

bromance movie accident arjun ashokan sangeeth prathap injured

Advertisment

பின்பு அடிப்பட்டவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வேகமாக கார் ஓட்டியபடக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.