/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marlia.jpg)
பிரபல பிரேசில் பாடகி மரிலியாமெண்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரேசில் நாட்டில் சிறந்த பாடகியாகத்திகழ்ந்த மரிலியாமெண்டோன்கா பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். இதனிடையே உலகம் முழுவதும் வேகமாகப் பரவிய கரோனாபரவலால் யாரும் வெளியே செல்லாமல் வீடுகளில் இருக்கும் நிலை வந்தது. இதனால் பாடகி மரிலியாமெண்டோன்கா வீட்டிலிருந்தேஆன்லைன் மூலம் பாடல்களைப் பாடி வந்தார். அவருடைய ஒரு யூடியூப் நேரலை 3.3 மில்லியன் பார்வையாளர்களால்பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாபரவல் சற்றுகுறைந்துள்ளதால்பாடகிமரிலியாமெண்டோன்கா நேற்று (5.11.2021) காரடிங்காவில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கத்தனி விமானத்தின் மூலம் புறப்பட்டார். அப்போது காரடிங்காவை நெருங்குவதற்கு 12 கி.மீ தொலைவிற்கு முன்னரே மரிலியாமெண்டோன்கா சென்ற விமானம் அங்கிருந்தஅருவியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மரிலியாமெண்டோன்கா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு மரிலியாமெண்டோன்கா, தான் விமானத்தில் ஏறப்போவதாகதனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us