/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1575.jpg)
அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'.இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துவிட்டது என்று அமீர்கான் கூறியதை சுட்டிக்காட்டி தற்போது லால் சிங் சத்தா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ஹிரித்திக் ரோஷன் லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவாகவும், அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹிரித்திக் ரோஷனுக்கு எதிராக பலரும்ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ஹிருத்திக் ரோஷன் தற்போது நடித்து வரும் விக்ரம் வேதா படத்திற்கு எதிராக #BOYGOTTVIKRAMVEDHA என்றஹேஷ்டேக்கையும்ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)