Skip to main content

தீபிகா படுகோனின் படத்தை புறக்கணியுங்கள்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

deepika padukone

 

 

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள்  ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேற்று இரவு நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார். 

தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீபிகா படுகோன் பாதிகப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேசும் சில வலதுசாரி அமைப்புகள், இது சபாக் படத்திற்கான விளம்பரம் என்று சொல்லி வருகின்றனர். மேலும் இவர்கள் சபாக் படத்தை புறக்கணிக்கப்போவதாக ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தீபிகா படுகோனுக்கு ஆதரவாகவும் ஹேஸ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது.

முன்பு தீபிகா நடிப்பில் வெளியான பத்மாவத் படத்திற்கும் இதேபோல ஒருசில அமைப்புகள் புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். ஆனால், அந்த படம் செம ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தேர்தல்; அனைத்து இடங்களையும் கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Left-wing alliance wins in JNU student union elections

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜஷே ஜோஷ் வெற்றி பெற்றியிருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 4 பதவிகளையும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தலைவர் தேர்தலில் ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர ஆஜ்மீராவை தோற்கடித்து இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டி லால் பாயிர்வா என்ற பட்டியலின மாணவர் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நிலையில், தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பட்டியலின மாணவர் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) அனைத்து பதவிக்கான போட்டியிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முத்தக் காட்சி - படக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 

இதையடுத்து படத்தின் மீதான விமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.