Skip to main content

"வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் பாக்ஸர்கள் ரௌடியாக மாறுகிறார்கள்..." பாக்ஸிங் கோச் மதி பேட்டி!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Coach Mathi

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் வெளியான பிறகு, பாக்ஸிங் விளையாட்டு பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில், பாக்ஸிங் கோச் மதியோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன் என்னை அடிச்சிட்டான். அந்தப் பையனை திருப்பி அடிக்கவேண்டும் என்பதற்காகவே பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்சேன். பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு அந்த எண்ணமே எனக்கு மாறிருச்சு. "பாக்ஸிங் என்பது ஒரு விளையாட்டு. இதை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்காப்பிற்காக தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். தேவையில்லாம ரோட்டுல சண்டை போடக்கூடாது" என என்னுடைய கோச் தொடர்ந்து கூறுவார். பாக்ஸிங்ல எனக்கு 14 வருஷ அனுபவம் இருக்கு. இதுவரை தேவையில்லாமல் சண்டை போட்டதில்லை. என்னை ஸ்கூல்ல அடிச்சவனையும் திருப்பி அடிக்கவில்லை. பத்துமுறை ஸ்டேட் லெவல்ல மெடல் அடிச்சிருக்கேன். ஆறுமுறை ஓப்பன் ஸ்டேட் லெவல்ல மெடல் அடிச்சிருக்கேன். நேஷனல் ஆறுமுறை விளையாடியிருக்கேன். ஆர்மில அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொஞ்ச நாள்ல அங்க இருந்து ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன். 

 

கஷ்டப்படுற ஏழை குழந்தைகள்தான் அதிகம் பாக்ஸிங் விளையாடுறாங்க. பாக்ஸர்களுக்கு பெரிய அளவில் ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. இருந்தாலும் நிறைய பாக்ஸர்கள் உருவாகிட்டுதான் இருக்காங்க. நிறைய கோச்சிங் செண்டர்ஸ் வந்துருச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு வந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷ ஒலிம்பிக்ல மொத்தமா 8 வீரர்கள்தான் தமிழ்நாட்டுல இருந்து களமிறங்குறாங்க. அதில் ஒருவர்கூட பாக்ஸர் கிடையாது. அரசு சார்பிலும் பெரிய அளவில் உதவி கிடைப்பதில்லை. பாக்ஸர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளும் கிடையாது. வேலைவாய்ப்புகள் இல்லாததால்தான் நிறைய பாக்ஸர்கள் ரௌடியாக மாறியுள்ளனர். எனக்கும்கூட அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துச்சு. என்னோட அப்பா, அம்மா நல்லபடியாக வழிகாட்டியதால் நான் அந்தமாதிரி போகல. பாக்ஸர்களுக்கு போலீஸ் மற்றும் ஆர்மீல மட்டும்தான் வேலைவாய்ப்பு இருக்கு. 

 

இங்க இருக்கிற அசோஸியேஷன்ஸே இரண்டா பிரிச்சிருக்கு. அவங்களுக்கு இருக்கிற கௌரவ பிரச்சனைக்கு இடையில பாக்ஸிங் மாட்டிக்கிட்டு இருக்கு. சர்பட்டா பரம்பரை படத்தில் காட்டியிருப்பதுபோல ஒரு காலத்தில் பாக்ஸிங்  இங்கு பெரிய அளவில் பிரபலமாக இருந்துள்ளது. முகமது அலியே சென்னை வந்து இங்கு நடக்கிற பாக்ஸிங் போட்டியை நேரில் பார்த்துள்ளார். அவர் மாதிரியான பல வெளிநாட்டு பாக்ஸர்கள் இங்கு நடக்கிற போட்டியை பார்ப்பதற்காக நேரில் வந்துள்ளனர். மதிவாணன் என்று ஒரு கோச் சென்னையில் உள்ளார். அவரிடம் உள்ள ஒரு போட்டோவில் முகமது அலி அவர் தோளில் கைபோட்டு நின்றுகொண்டிருப்பார். பாக்ஸிங் கடவுள்னு சொல்லப்படுகிற ஒருவர் இங்கு நடக்குற போட்டியை பார்ப்பதற்காக நேரில் வந்திருக்கிறார் என்றால் அது நமக்கு ரொம்ப பெருமையான விஷயம். இந்த சர்பட்டா பரம்பரை திரைப்படம் பாக்ஸிங் தொடர்பாக நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் 3 விருதுகளைப் பெற்ற சார்பட்டா பரம்பரை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

3 award-winning Sarbata parambarai in Japan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது. சில வாரங்கள் முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சார்பட்டா பரம்பரை 2' உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மேட்ச் பார்க்க ரெடியா... ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சுற்று 2" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா’வில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த கலை இயக்குநருக்கான விருதுகளை சார்பட்டா பரம்பரை வென்றுள்ளது.

 

 

Next Story

'சார்பட்டா பரம்பரை' பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

Trisha joins 'Sarpatta Parambarai' celebrities

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'பரமபதம்'. அடுத்து மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோடு' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. மேலும் மதுரையில் இன்று படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.