சமீபத்தில் அருண் விஜய் தடம் படத்தை தொடர்ந்து நடிக்க இருக்கும் படங்களின் அறிவிப்புகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய இளம் இயக்குநருடன் இணைந்து மாஃபியா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.

Advertisment

boxer

தடம் படத்திற்கு முன்பே பாக்ஸர் என்றொரு படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தடம் படம் வெளியானவுடன் அதில் நடிக்க தொடங்கினார். இதற்காக இந்தோனேசியா சென்று அந்த தற்காப்பு கலையை பயின்று நடித்து வருகிறார். இவருடன் ரித்விகா சிங்கும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை புதுமுக இயக்குநர் விவேக் இயக்க, டி.இமான் இசையமைக்கிறார். திடீரென இப்படத்தின் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இன்றி டி.இமானை வைத்து வெளியிடப்பட்டது. ஏன் இப்படி செய்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பமாக இருக்க, அதற்கு அருண் விஜய் இரவு 1:30 மணியளவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் தந்துள்ளார்.

Advertisment

அதில், “பாக்ஸர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனக்கு எந்த அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டது வருத்தமாக இருந்தது. ஆனால், பாக்ஸர் படத்தின் போஸ்டர் நேற்று மாலையே லீக்காகி விட்டது இதனால்தான் படக்குழு எந்தவித அறிவிப்பும் இன்றி ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இதையும் ரசிகர்கள் அமோகமாக வரவேற்கின்றனர். இந்த படத்திற்காக ஒன்பது மாதங்கள் உழைத்திருக்கிறேன். இது எளிதில் முடியக்கூடிய படம் இல்லை.