Advertisment

"தண்ணீர் பாட்டில்ங்கறது நம்மோட லைஃப்ல கலந்துடுச்சி" - இயக்குநர் மித்ரன் பேட்டி

publive-image

மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம்உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மித்ரன் ரசிகர்களுடன் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் மித்ரன், "இந்த படம் என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ். அதுவே எனக்கு ஸ்பெஷலான ஒரு மொமென்ட். இப்படத்திற்காக, ரொம்ப கடினமாக உழைத்திருக்கோம். கண்டிப்பா படத்தை பாருங்க. தீபாவளிக்கு குடும்பத்தோட வந்து சர்தார் படம் பாருங்க. இரும்புத்திரையில் என்ன சொல்ல ட்ரை பண்ணமோ, அந்த மாதிரி இதில் வேற ஒரு டாபிக் சொல்லிருக்கோம். இந்த விழிப்புணர்வு சொல்றது மக்கள் எடுக்கும் முடிவுலதான் இருக்கு. அவர்கள் என்ன முடிவு எடுக்குறாங்களோ, அத பொறுத்துதான் இருக்கு.

Advertisment

இரும்புத்திரையில செல்போன்பத்தி பேசுனோம். ஆனா இப்ப செல்போன் இல்லாம யாராவது இருக்காங்களா?அந்த மாதிரி தான். தண்ணீர் பாட்டில்ங்கறது நம்மோட லைஃப்ல கலந்துடுச்சி. அத கொஞ்சம் கவனமா சிந்திக்கணும். கதைக்கு தேவையான நேரத்தைக் கொடுத்துருக்கறோம். படம் ஒரு புனைவு படம். ஸ்பை த்ரில்லருனு சொல்லும்போது, அந்நிய நாட்டை எல்லாம் காட்ட வேண்டிய சூழல் இருக்கும். கோர் கான்செப்ட்டா தண்ணீர் பத்தி சொல்லணும்னு என்னுடைய எண்ணமா இருந்துச்சு. தண்ணீர் பாட்டில்ல கிடைப்பது கன்வீனியன்ஸா இருக்கு.

குடிநீருக்கு நாம யூஸ் பண்ணக் கூடிய பாத்திரம் பாத்திங்கன்னா, எவர் சில்வர் கொடமா தான் இருக்கும். அத தான் நாம காய வச்சி குடிச்சிட்டு இருப்போம். மெட்ரோ வாட்டர இரண்டு தடவ, மூனு தடவ காய வச்சிக் குடிங்க; ஒரு தப்பும் கிடையாது. படத்தின் மூலமா பெரிய கருத்தெல்லாம் சொல்ல போறது இல்ல. நான் இந்த படத்துல கருத்து சொல்ல வரல. இருக்கற விசயத்தைக் காட்டிருக்கன்" எனத் தெரிவித்தார்.

actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe