'Boss engira Baskaran 2' - Latest Release Information

ஆர்யா, சந்தானம் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. ராஜேஷ் இயக்கிய இப்படத்தை ஆர்யா மற்றும் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 12 வருடம் கழித்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களிடம் நாம் விசாரித்த போது இப்படத்தின் இரண்டாம் பாகம் காலம், சூழல் என எல்லாம் கைகூடி வந்தால் அது நடக்கும் எனவும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுவதாக சொல்கின்றனர்.

Advertisment

இதனிடையே இயக்குநர் ராஜேஷ் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்கவுள்ளார். செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இப்படத்தை முடித்துவிட்டு 'பாஸ் (எ) பாஸ்கரன்' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.