bose venkat

Advertisment

சாத்தான் குளத்தில் தந்தை மகன் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் துன்புறுத்திக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைஉருவாக்கியது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை ஏற்று, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது?

Advertisment

இதற்குக் காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களைமுறையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.