Advertisment

அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட்

Bose Venkat criticized Ajith

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதனிடையே விஷ்ணு விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டிருந்தார். பின்பு தீயணைப்பு வீரர்கள் அவரையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மக்களை பாதுப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

Advertisment

இதையடுத்து அஜித் தங்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்து, அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை நடிகர் போஸ் வெங்கட் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அஜித்தை விமர்சித்திருந்தார். அந்த பதிவில், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

chennai floods CycloneMichaung bose venkat ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe