
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவான 'பெண்குயின்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கார்த்திக் சுப்புராஜ் அடுத்தாக தயாரிக்கவுள்ள "பூமிகா" படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'இது வேதாளம் சொல்லும் கதை' பட இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாக உருவாகும் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் நீலகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கவுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சவால்மிக்க கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.