Advertisment

 ‘பூமி’ படம் ஓடிடி ரிலீஸா?

jayam ravi

ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் ஜெயம் ரவியின் 25வது படமான பூமியை இயக்கியுள்ளார்.

Advertisment

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் நித்தி அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ரவிக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விவசாயம் குறித்து பேசும் இப்படத்தின் டீஸர் இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

Advertisment

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடத் தொடக்கத்தில் முடிவடைந்தது. மே மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாக முதலில் அறிவித்த படக்குழு, இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டிருக்கையில் கரோனா காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயம் ரவியின் 25வது படம் என்பதால் திரையரங்கில் பெரியளவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஓடிடி ரிலீஸுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

jayam ravi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe