Skip to main content

முடிந்தது அதர்வா படம்... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் 

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
atharvaa


நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்ததாக 'செம போத ஆகாதே' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது இமைக்க நொடிகள், பூமராங், ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த மற்றும் பெயரிடப்படாத சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் 'பூமராங்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குனர் கண்ணன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நடிகர் அதர்வா சொந்த தயாரிப்பில் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ''செம்ம போத ஆகாத'' இந்த படத்தின் உரிமத்தை மதியழகன் என்பவருக்கு 4.5 கோடிக்கு விற்பனை செய்தார் அதர்வா. படம் வெளிவருவதற்கு முன்பாக முன்பணமாக 3.5 கோடி ரூபாயை நடிகர் அதர்வா பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த படம் திரைக்கு வந்த அன்று மற்றொருவர் அதர்வா மீது மோசடி புகார் கொடுத்ததால் அந்த திரைப்படத்தின் முதல் நாள், முதல் இரண்டு காட்சி தடையானது. இதனால் படத்தின் உரிமம் பெற்ற மதியழகன் நஷ்டம் அடைந்ததால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

 

complains about Actor Atharva


இதில் தலையிட்ட நடிகர் விஷால் இருதரப்பிலும் சமாதானத்தை ஏற்படுத்தி அதர்வாவிற்கு சேர வேண்டிய 1 கோடி பணத்தில் மீதமுள்ள 45 லட்ச ரூபாயை மதியழகனிடம் இருந்து பெற்றுதந்து அதேபோல இந்த படத்தில் நஷ்டம் ஏற்பட்ட மதியழகனுக்கு சம்பளம் இல்லாமல் ஒரு படம் நடித்து தருவதாக அப்போது மத்தியஸம்  செய்யப்பட்டு அக்கிரிமெண்ட் போடப்பட்டது. அதன்பேரில் இன்றுவரை அதர்வா தனக்கு சொன்னபடி படத்தில் நடித்து கொடுக்க மறுத்து வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் மதியழகன்.