Published on 12/08/2019 | Edited on 12/08/2019

அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படம் சமீபத்தில் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தின் வசூல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... ''நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் சிதறடித்துள்ளது. இதுவரை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்துள்ளது'' என பதிவிட்டுள்ளார். 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் 7 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.