Advertisment

"என் மனைவி இவரை பற்றி எப்போதும் கூறுவார்" - போனி கபூர்

boney kapoor talk about veetla vishesham movie

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பதாய் ஹோ'. இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் ஆர்.ஜே பாலாஜி வீட்ல விசேஷம்என்ற பெயரில் நடித்துள்ளார். இப்படத்தை என்.ஜே சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures தயாரித்து போனி கபூர் வழங்கும்இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்துஅண்மையில் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன்இயக்குநர்கள்பி.வாசு, சுந்தர் சி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாககலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், "நான் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ஒரு ரீமேக்காக உருவானது தான். நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் கலைஞர்களுடைய ஒழுக்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். நான் தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். என் குடும்ப வாழ்க்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும். ஶ்ரீதேவி, ஊர்வசி பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார், நானும் அதை ஒத்துக்கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. நான் தமிழ் படங்களை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நிறைய தமிழ்ப்படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன். பாலாஜி சிறந்த படமாக வீட்ல விஷேசம் படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும்" என்றார்.

Advertisment

Boney kapoor RJ Balaji Veetla Vishesham movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe