Advertisment

'அஜித் ஓகே சொன்னா.....' போனி கபூர் சொன்ன சர்பிரைஸ் !

'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனிகபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisment

boney

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர், அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "நேர்கொண்ட பார்வையின் சில காட்சிகளை பார்த்தேன். சந்தோஷம். அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். அவர் விரைவில் ஹிந்தி படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். 'நேர்கொண்ட பார்வை' வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nerkonda Paarvai Ajith59 ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe